சென்னை, தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தை  01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். உடன், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தைக் காணொளி மூலமாகத் திறந்தவைத்த 01.03. 2016 அன்று மாலை 3.00 மணியளவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்திற்குத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்கள் வருகை புரிந்து, குத்துவிளக்கேற்றி வைத்துக் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டார். உடன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் மற்றும் நிறுவன அலுவலர்கள்.

01.03.2016 அன்று முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் இனிப்புகள் வழங்கினார். உடன் காட்சிக்கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ. மணவழகன் மற்றும் நிறுவனப் பணியாளர்கள்.